என்ன கூட்டு பொரியல் செய்வது யோசனையா ? ருசியான புடலங்காய் மசாலா இப்படி செய்து பாருங்க!

Summary: காலையில் அவசர அவசரமாக டிபன் கட்டும்போது இந்த ரெசிப்பி ரொம்பவும் உபயோகமாக இருக்கும். புடலங்காய் நீர் சேர்த்துள்ள காய்கறி என்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும். இது செரிமானத்துக்கும், குடல் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல குடலில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. இந்தபுடலங்காய் மசாலா செய்வதற்கு எதையும் அரைக்க வேண்டாம், அப்படியே வேக வைத்து விடலாம்.எல்லா வகையான காரசாரமான சாப்பாட்டிற்கும் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்தபுடலங்காய் மசாலா ரெசிபி எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின்மூலம் இனி நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1/2 கிலோ புடலங்காய்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 பூண்டு பல்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 கப் தேங்காய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. புடலங்காய் விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. அதன் பிறகு நறுக்கிய புடலங்காய், தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, மூடி வேகவைக்கவும்.
  4. புடலங்காய் வெந்ததும், அரைத்த கலவையைச் சேர்த்து கலந்து விடவும். காயிலுள்ள தண்ணீர் வற்றி, மசாலாவின் வாசனை இல்லாதபோது பொரியலை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  5. சுவையான புடலங்காய் மசாலா தயார்