மணமணக்கும் ராஜஸ்தானி மட்டன் கிரேவி செய்வது எப்படி ?

Summary: எப்பொழுதும் போல் மட்டன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொழுது இது போன்று மாறுதலாக மட்டன் ரெசிபிகளையும் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட பரிமாறினால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கும் இந்த ராஜஸ்தானி மட்டன் ரெசிபி மிகவும் பிடித்து போய்விடும். அடுத்த முறை உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மட்டன் ரெசிபி இருக்கும்.

Ingredients:

  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 3 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 2 கரும்பு ஏலக்காய்
  • ஜாதிக்காய்
  • ஜாதி பத்தரி
  • 3 கிராம்பு
  • 5 பெரிய வெங்காயம்
  • 2 வர மிளகாய்
  • 1 ½ மேசை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 KG மட்டன்
  • காஷ்மீரி வத்தல் பேஸ்ட்
  • 2 tbsp தனியா துாள்
  • உப்பு
  • 1 tbsp நெய்
  • 1 கப் புளிக்காத தயிர்
  • 2 கப் தண்ணீர்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் காஷ்மீரி வத்தலை எடுத்துக்கொண்டு அதனை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு மணி நேரம் ஊறிய காஷ்மீரி வத்தலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் கொரகொரவன அரைத்து. அதன் பின் வத்தல் ஊறவைத்த தண்ணீரில் சிறிது சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  3. பின் எண்ணய் நன்கு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கருப்பு ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதி பத்திரி மற்றும் கிராம்பு போன்ற பொருள்களை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு பின் நீள் வாக்கில் நிறுத்திய பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போன பின் இதனுடன் வர மிளகாய் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் மட்டனை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின் மட்டன் ஓரளவு வெந்தவுடன் நாம் அரைத்த காஷ்மீரி மிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளறி விட்டு வதக்கவும். பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து விட்டு கிளறி விடுங்கள். பின் ஒரு இரண்டு நிமிடம் கழித்து புளிக்காத தயிர் சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கி கொள்ளவும்.
  6. பின் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்துக் கொள்ளுங்கள். பின் தீயை குறைவாக வைத்து ஒரு மணி நேரங்கள் நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். பின் மட்டன் நன்கு வெந்து வந்தும் சிறிது, கொத்த மல்லி தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ராஜஸ்தானி மட்டன் கிரேவி இனிதே தயாராகிவிட்டது.