ஆந்திரா ஸ்டைலில் மணமணக்கும் பச்சை பயறு தோசை செய்வது எப்படி ?

Summary: வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல தோசையான பச்சை பயிறு தோசையை செய்து சாப்பிடலாம்.இந்த பயிரை உணவில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களையும் கொடுக்கிறது. பச்சை பயிரில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஈஸியான ரெசிபியும் கூட சரி இப்பொது ஆந்திரா ஸ்டைல் பச்சை பயிறு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Ingredients:

  • 2 கப் பச்சை பயிறு/பாசி பயிறு
  • 3 டேபிள் ஸ்பூன் அரிசி
  • 1 வெங்காயம்
  • 1 இன்ச் இஞ்சி
  • 1½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 5 பச்சை மிளகாய்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பச்சை பயிறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைக்கவேண்டும்.
  2. பின்னர் அதனை நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவேண்டும்.
  3. பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம், சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  4. பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள கெட்டியான மாவில் கரண்டில் சிறிது எடுத்து, கல்லில் போட்டு வட்டமாக கையால் பரப்பி விடவும்.
  5. பின் மாவின் அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, தோசை கரண்டியால் லேசாக தட்டி, பின் மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்
  6. இப்படியாக மீதம் இருக்கும் அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ளவும் வேண்டும். அவ்வளவு தான் ஆந்திர ஸ்டைல் பச்சை பயறு தோசை தயாராகிவிட்டது.