இனி ருசியான ரவா இட்லி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும் ஒரு இட்லி கூட மீதமாகாது!

Summary: சதா இட்லி, தோசை என்று சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு இந்த ரவா இட்லி ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.இதன் சுவை மிகவும் அருமையாகஇருக்கும். எப்பபாத்தாலும் ஒரே வகையான உணவுப் பொருட்களை, சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, புதுவிதமான, சுலபமான உணவுகளைநம்முடைய வீட்டில் சமைத்து, குழந்தைகளுக்கு கொடுப்பது, வீட்டில் உள்ள பெண்களுக்கு மனதிருப்தியைக் கொடுக்கும். அந்த வரிசையில் ரவா இட்லி, சூப்பர் டிபன். நிறைய பேருக்குஇது புடிக்கும்.  வழக்கமான இட்லி, தோசை என்று சமைத்து கொடுக்காமல் அதே இட்லியை சற்று வித்தியாசமான முறையில் சுவையாக செய்து கொடுத்து பாருங்கள்.நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு இட்லிவேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 டம்ளர் வெள்ளை ரவை
  • 1 கேரட்
  • தேங்காய் துருவல்
  • 1 பச்சை மிள்காய்
  • 1 டம்ளர் தயிர்
  • தண்ணீர்
  • உப்பு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • முந்திரி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கேரட்டை துருவி வைக்கவும், பச்சை மிளகாய் மட்டும் தனியாககாரத்துக்கு ஏற்ப மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்,பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய் போட்டு வாசம் போகும் வரை வதக்கவும்.நன்கு வதங்கியவுடன் அதோடு ரவையை கொட்டி 5 நிமிடம் வதக்கவும்
  3. பின் வதக்கிய அனைத்தையும் ஆற வைக்கவும், ஆறிய பிறகு தயிர், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்குகலந்துக் கொள்ளவும்.
  4. இட்லி தட்டில் துருவிய தேங்காய், கேரட் வைத்து அதன் மேல் இந்த மாவை ஊற்றி, இட்லியை போல வேக வைத்துஎடுக்கவும்.
  5. சுவையான ரவா இட்லி ரெடி