காலை டிபனுக்கு ருசியான பிரண்டை தோசை இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Summary: ஆரோக்கியமான காலை உணவையை உண்போம். பிரண்டை மருத்துவம் குணம் கொண்ட சத்தான உணவு பொருளாகும் . சிலர் சூப் வைத்து குடிப்பார்கள், சிலர் துவையல் வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் இதை காலை உணவான இட்லி, தோசையுடன் இணைத்து சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமானதாகவும் குழந்தைகளுக்குப் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த பிரண்டையை வைத்து தோசை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1/2 கப் பிரண்டை
  • 1/2 கப் உளுந்த பருப்பு
  • 2 கப் பச்சரிசி
  • 2 கப் இட்லி அரிசி
  • 1 Tbsp வெந்தயம்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசைக்கல்
  • 1 கிரைண்டர்
  • 1 பவுள்

Steps:

  1. பிரண்டை தோசை செய்ய முதலில் அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி 3 மணி நேரம் ஊற ஒன்றாக ஊறவைக்கலாம்.கைகளில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க எள் எண்ணெயை தாராளமாகத் தடவவும் அல்லது கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
  2. பிரண்டையை சுத்தம் செய்து, முதலில் இலைகளை அகற்றி, பின் முனைகளில் சிறிய துண்டுகளாக உடைக்க வேண்டும்.கூர்மையான விளிம்புகளை கவனமாக வெட்டுங்கள்.
  3. பின்பு தோராயமாக நறுக்கி கொண்டுமிக்ஸி அல்லது வெட் கிரைண்டரில் பிரண்டை மற்றும் ஊறவைத்த பொருட்களை சேர்க்கவும்.
  4. முதலில் பிரண்டையை அரைத்தால் நன்றாக இருக்கும்.பின் மீதம் உள்ளவற்றை சேர்த்து அரைக்கவும்.இவற்றை மிருதுவான மாவாக அரைக்கவும். அரைக்கும் போது கடைசியாக உப்பு சேர்க்கவும்.
  5. பின்னர் இவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து மூட வேண்டும். நொதித்தலுக்கு ஒரே இரவில் வைக்கவும்.
  6. பின்பு காலையில் நன்றாக கலந்து தோசை தயாரிக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரில் கரைக்கவும்.
  7. வழக்கமான தோசை மாவில் செய்வது போல் சூடான தவாவில் பரப்பவும். பொன்னிறமானதும், இருபுறமும் நன்கு வேகும் வரை புரட்டி இறக்கவும். பின்னர் சுவையான ஆரோக்கியமான பிரண்டை தோசை ரெடி.