சாப்ட்டான சுவையான ரூமாலி ரெட்டி செய்வது எப்படி ?

Summary: ஹோட்டல்களில் பெரும்பாலான நபர்கள் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிடும் ஒரு உணவு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், நாம் இன்று ரூமாலி ரொட்டி எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம். பெரும்பாலும் ஹோட்டல் செல்லும் பலரும் இந்த ரூமாலி ரொட்டி சாட்டாக இருக்கும் காரணத்தினால் இதை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள் இதன் ருசிககும் பஞ்சமில்லாமல் அட்டகாசமான முறையில் இருக்கும். இதை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக உங்கள் குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 கப் மைதா மாவு
  • ½ tbsp உப்பு
  • ¾ கப் பால்
  • 2 tbsp எண்ணெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பவுளில் இரண்டு கப் அளவிற்கு மைதா மாவு எடுத்து அதனுடன் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இதனுடன் முக்கால் கப் அளவிலான காய்ச்சிய பாலை சிறுது சிறிதாக சேர்த்து சாப்புட்டாக மாவை பிசைந்து கொள்ளுங்கள்.
  2. பின் மாவை முழுமையாக பிசைந்து முடித்தவுடன் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, மறுபடியும் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பின் மாவின் மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவை சுற்றி தடவி விட்டு ஒரு ஈரத்துணியால் முடி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. பின் 20 நிமிடம் கழித்து சிறு உருண்டைகளாக 10 உருண்டைகள் பிடித்துக் கொள்ளுங்கள். பின் ஒரு உருண்டையை மேசை மீது வைத்து சிறிது எண்ணெய் தடவி, மைதா மாவு தூவி முடிந்த அளவிற்கு மென்மையாக தேய்த்து கொள்ளவும் பின் இதே போல் அதே அளவில் மீதமிருக்கும் உருண்டைகளையும் தேய்த்து கொள்ளவும்.
  4. பின் வட்ட வடிவமாக தேய்த்த மாவு வைத்து அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி மேல் சிறிது மைதா மாவு தூவி அதற்கு மேல் இன்னொரு வட்ட வடிவ மாவை வைத்து நீள் வட்டமாக மென்மையாக தேய்த்துக் கொள்ளுங்கள். பின் இவ்வாறாக மீதம் இருக்கும் மாவையும் தேய்த்துக்கொண்டு. தோசைக்கல் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  5. பின் தோசை கல் காய்ந்ததும் ரொட்டியை தோசை கல்லில் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் வேக வைத்த ரொட்டியை இரண்டாக பிரித்து சாப்பிட பரிமாறி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான ரூமாலி ரொட்டி இனிதே தயாராகிவிட்டது.