மணமணக்கும் சுவையான தக்காளி ரவா தோசை எப்படி செய்வது ?

Summary: இன்று வித்தியாசமான முறையில் தக்காளி ரவா தோசை செய்வது பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த தக்காளி ரவா தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மேலும் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் உணவாக மாறிப்போகும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த தக்காளி ரவா தோசை இருக்கும். அதனால் இன்று இந்த தக்காளி ரவா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 3 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 3 வர மிளகாய்
  • 1 கப் வெள்ளை ரவா
  • 1 கப் அரிசி மாவு
  • ½ கப் கோதுமை மாவு
  • உப்பு
  • 2 டம்பளர் தண்ணீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கொத்து கொத்த மல்லி
  • ½ tbsp மிளகு
  • ½ tbsp சீரகம்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய முன்று தக்காளி, முன்று வர மிளகாய் மற்றும் ஒரு துண்டு சிறிய இஞ்சி சேர்த்து மை போல நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு பெரிய பவுள் எடுத்துக் கொண்டு அதில் நாம் அரைத்த தக்காளியை சாறை ஊற்றி கொள்ளவும்.
  2. பின் இதனுடன் ஒரு கப் வெள்ளை ரவா, ஒரு கப் அரிசி மாவு மற்றும் அரை கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு இந்த மாவை ஒரு 15 நிமிடங்கள் தொடாமல் தனியாக ஊற வைத்து விடுங்கள். பின் இந்த மாவுடன் நாம் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.
  4. பின் ரவா தோசைக்கு மாவு எப்பொழுதும் தண்ணீர் பதத்திற்கு இருக்க வேண்டும், ஆகையால் இன்னொரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மாலை தண்ணீர் போல் ஆக்கிக் கொள்ளவும். பின் அரை டீஸ்பூன் இடித்த மிளகு மற்றும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  5. பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடானதும் ஒரு முறை மாவை நன்றாக கலந்து கொண்டு இடைவெளிகள் இல்லாமல் தோசையை ஊற்றிக் கொள்ளவும் பின்பு தோசை ஒரு பக்கம் பொன்னிறமாக வந்தவுடன் திருப்பி போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக விடவும்.
  6. பின் தோசையின் இரு பக்கமும் பொன்னிறமாக வந்தது எடுத்துக் கொள்ளவும். பின் இப்படியாக மீதம் இருக்கும் மாவை நன்றாக கலக்கி கலக்கி ஊற்றிக் கொள்ளவும் அவ்வளவுதான் சுவையான தக்காளி ரவா தோசை இனிதே தயாராகிவிட்டது.