மொறு மொறு வென ருசியான பிங்கர் பிஷ் ஒரு முறை இப்படி வீட்டிலே செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி!

Summary: பிங்கர் பிஷ் என்றாலே அனைவரும் விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள். அதிலும் ஹோட்டல் ஸ்டைலில் பிங்கர்பிஷ்  செய்து கொடுத்தால் சொல்லவே வேண்டாம்.மீன் முள் எதுவும் இல்லாததால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். புலாவ்,ரசம்,சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.தேவைப்பட்டால் சப்பாத்தி ரோல் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சைடிஷ் ஆகவைக்கலாம். ஒரு ஸ்பெஷல் பிங்கர் பிஷ் இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம்.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமானபிங்கர் பிஷ்  எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதைதான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.

Ingredients:

  • 5 துண்டு நெய் மீன்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி கார்ன் ப்ளார்
  • ப்ரெட் க்ரம்ப்ஸ்
  • எண்ணெய்
  • 1 1/2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி .மிளகு தூள்
  • 1 தேக்கரண்டி சாட் மசாலா
  • 1/4 சீரக தூள்
  • 2 தேக்கரண்டி கார்ன் ப்ளார்
  • 2 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1/4 தேக்கரண்டி சோயா சாஸ்
  • 1 முட்டை
  • 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மீனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். மீன் ஆறிய பிறகு முள் எல்லாம் நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து விடவும்.
  2. உதிர்த்த மீனில் கார்ன் ப்ளார் சேர்த்து மெதுவாக பிசையவும். பின் விரல் நீளத்திற்கு சிறு சிறுத் துண்டுகளாக உருட்டி வைக்கவும்.
  3. மாவிற்கு கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கடைசியாக முட்டை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  4. மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  5. சுவையான பிங்கர் பிஷ் ரெடி