காலை உணவுக்கு ருசியான அவல் போகோ இப்படி ஒரு முறை இதை செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: காலை வேளையில் சமைப்பதற்காக வீட்டில் அரிசி மாவு கோதுமை மாவு எதுவும் இல்லை என்றாலும் அல்லது ஏதாவதுவித்தியாசமாக சமைக்க வேண்டும் என்றாலும் அவலை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த போகோ சுலபமாகசெய்யக்கூடியது இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில்சத்துக்கள் நிறைந்துள்ளது என்று தேடித்தேடி சமைப்பது. இப்போதெல்லாம் அனைத்து வீடுகளிலும்யாராவது ஒருவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.அப்படி உள்ள வீடுகளில் பெண்கள் வேலைக்கு போகும் அவசரத்தில் குழந்தைகளுக்கு தனியாகவும்,இவர்களுக்கு தனியாகவும் சமைப்பது என்பது முடியாத காரியம். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்குஅவலை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த போகோவை  ஆரோக்கியமாக செய்து தரலாம். பல சத்து நிறைந்த ஆரோக்கியமானஉணவுகள் இருக்க தான் செய்கிறது.

Ingredients:

  • 1 அவல்
  • உருளைக்கிழங்கு
  • தக்காளி
  • மிளகாய் தூள்
  • வேர்க்கடலை
  • மல்லித் தூள்
  • கல் உப்பு
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவல் மற்றும் வேர்க்கடலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து மூடி வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் எடுத்து விடவும்.
  3. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் வேர்க்கடலை போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் அவலை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளவும். தண்ணீரை நன்கு வடித்து விடவும். அதன் பிறகு அலசிய அவலில் வறுத்த வேர்க்கடலை போடவும்.
  5. வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் நறுக்கின தக்காளி மற்றும் கறிவேப்பிலை போட்டு 30 நொடி எண்ணெயில் பிரட்டவும்.
  6. அதன் பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு போடவும். தூள் வகைகளை சேர்த்த பிறகு 2 நிமிடம் நன்கு பிரட்டி விடவும். 2 நிமிடம்கழித்து உருளைக்கிழங்குடன் தூள் வகைகள் ஒன்றாக சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  7. பிறகு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் அவலுடன் வதக்கியவற்றை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். அவல் போகோ தயார். இதை மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்த விடலாம்.