ரசம் பிடிக்காதவர்கள் கூட சூப் போல குடிப்பார்கள் ருசியான மைசூர் ரசம் இப்படி செய்து பாருங்க!

Summary: குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற குழம்பு வகைகளில் இந்த ரசத்திற்கு எப்போதுமேமுதலிடம் தான். இதில் நாம் சேர்க்கும் மிளகு, சீரகம், பூண்டு,  ஜீரண சக்திதரும். அது மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்த ரசம் சேர்த்து சாப்பிடும்போது உடல் சோர்வை கூட நீக்கி சுறுசுறுப்பை தரும்.பல வகையான ரசத்தில் இதுவும் ஒரு வகையானமைசூர்  ரசம் ஆகும். இந்த ரசம் செய்வதற்கு நெய்யில்வறுத்து ரசப்பொடியை அரைக்க அரைத்து செய்ய வேண்டும். இந்த ரசம் இப்படி வைக்கும் போது,அதன் சுவை வித்தியாசமாகவும், டேஸ்டியாவும் இருக்கும். ஒரு குண்டான் சாதம் இருந்தாலும்உங்களுக்கு பத்தவே பத்தாது. நீங்கள் ஊற்றி ஊற்றி சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடிய அளவிற்குஅருமையான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • புளி
  • தக்காளி
  • நெய்
  • எண்ணெய்
  • உப்பு
  • துவரம் பருப்பு
  • ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி விதை
  • 1 மேசைக்கரண்டி மிளகு
  • 3 வரமிளகாய்
  • 1 மேசைக்கரண்டி கடலைபருப்பு
  • 1 கிள்ளு பெருங்காயம்
  • 2 இதழ் கறிவேப்பிலை
  • 2 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  • கடுகு
  • 1 மேசைக்கரண்டி சீரகம்
  • 5 பல் பூண்டு
  • 1 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு
  • 2 கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. புளியை ஊறவைக்கவும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்துஆறிய பின் அரைத்துக் கொள்ளவும்.
  2. பின் அதே பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு சிறிது உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  3. பின் அதே பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு சிறிது உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  4. புளிக் கரைசலை ஊற்றி 5 நிமிடம் கழித்து பின் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். தேவையான உப்பை போட்டுக் கொள்ளவும்.
  5. இடையில் இன்னொரு சிறிய கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி தாளித்து ஊற்ற வேண்டிய பொருட்களை தாளித்து ரசத்தில் கொட்டவும்.
  6. மணமான, மிகவும் சுவையான மைசூர் ரசம் தயார். மல்லித் தழையை தூவவும், வேண்டுமெனில் ஒரு தேக்கரண்டி ரசப் பொடியையும் சேர்க்கலாம். இன்னும் மன தூக்கலாக இருக்கும்.