ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

Summary: சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு சாப்பிட்டு பாருங்கள். சாதம் அமிர்தமாக உங்களுக்கு தெரியும். பில்டப் அதிகமாக உள்ளதா. யோசிக்காம ஒரே ஒருமுறை உருளைக்கிழங்கு வைத்து இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே தெரியும் இதனுடைய ருசி. உருளைக்கிழங்கை வைத்து வறுவல் பொறியியல் என்று பலவகை செய்யலாம் அது போல் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். காய்களிலேயே உருளைக்கிழங்குஅனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு நாம் எப்போதும்சட்னி சாம்பார் என்று தான் சைடிஷ் செய்வோம்.

Ingredients:

  • 2 உருளைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • 2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு
  • 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
  • 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 2 சிட்டிகை மஞ்சள்தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1 கரண்டி இட்லி மாவு
  • 2 கொத்து கொத்தமல்லி
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெங்காயம்,தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு. கடலைப்பருப்பு தாளிக்கவும்.
  3. அதன் மேல் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும். இவற்றுடன் பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு ஒரு முறை வதக்கவும்.
  4. காய்கறிகள் நன்கு வதங்கிய பின், 3 டம்ளர் தண்ணீர் கலந்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  5. சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து ஒரு கரண்டி இட்லி மாவு எடுத்து கலந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். இதன் மேல் கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கலந்து விட்டால் சுவையான கொஸ்து தயார்.