கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?

Summary: பெரும்பாலும் நாம் வீடுகளில் செய்யும் சுண்டலை விட கோவில்களில் செய்யும் சுண்டலை நம் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று கோவில்களில் வைக்கப்படும் சுண்டல்களின் ருசியிலே நாமும் தயார் செய்ய போகிறோம். மேலும் அதில் பெரும்பாலும் தமிழ் நாட்டில் பயன்படுத்துவது ப்ரௌன் நிற சுண்டல் தான்.இந்த சுண்டலில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.மேலும் இந்த சுண்டலை தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு இனயைாக கிடைக்கும் சத்துக்களை நாம் பெறலாம்.

Ingredients:

  • 1 கப் கருப்பு சுண்டல்
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • ¼ டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • ½ கப் தக்காளி
  • ½ கப் வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் சன்ன மசாலா
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் சுண்டலை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவேண்டும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
  3. அதன் பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின் மல்லி தூள், மஞ்சள் தூள்,சன்ன மசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறி விடவேண்டும்.
  4. பின்பு வேகவைத்த சுண்டலை சேர்த்து 1 கப் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சுடும்வரை அடுப்பில் வைத்து பிரட்ட வேண்டும்.
  5. தண்ணீரானது முற்றிலும் சுண்டிய பின்பு அதில் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
  6. இப்பொழுது சுவையான சுண்டல் ரெசிபி தயார்.