ருசியான மலபார் முட்டை கறி இப்படி செய்து பாருங்க! யாருனாலும் ஈஸியாக செய்துவிடலாம்!

Summary: அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலைசாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக்கூடிய வகையில் சூப்பரான ஒரு கிரேவி மலபார் எக் கறி.  சமையலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் புதிதாக சமைக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியானவர்கள் ரொம்பவே எளிமையாக அதே நேரத்தில் ஆரோக்கியமாகஇருக்க கூடிய இந்த மலபார் எக் கறி சுலபமாக செய்துவிடலாம். முட்டையில் புரோட்டீன்மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. சுவையான மலபார் முட்டை கறி சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாகஇருக்கும்.

Ingredients:

  • 6 முட்டை
  • 2 வெங்காயம்
  • 1 தேக்கரண்டி .இஞ்சி பூண்டு விழுது
  • 2 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 கப் முதல் தேங்காய் பால்
  • 1 கப் இரண்டாவது தேங்காய் பால்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முட்டையை வேக வைத்து ஓடெடுத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும், பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
  5. கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் எடுக்கவும்.சுவையான மலபார் எக் கறி தயார்.