டீக்கடை வெங்காய போண்டா இப்படி செய்து பாருங்க! அதன் ருசியின் ரகசியம் இது தான்!

Summary: டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெங்காய போண்டா இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள் அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.ஏனென்றால் இந்த போண்டா எல்லோருக்கும் பிடித்த டீ கடைகளில் விற்கப்படும் வெங்காய போண்டா டேஸ்ட்டில் இருக்கும்.இந்த போண்டாவை நாம் வீட்டிலேயே அதே சுவையில் செய்து விடலாம், அதுவும் 10 நிமிடத்தில் சுலபமாக செய்து விடலாம்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 4 கப் வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 5 புதினா இலைகள்
  • ½ டீஸ்பூன் சோம்புத்தூள்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் சிக்கன் மசாலா
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1 கப் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் மைதா மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா இலைகள், மிளகாய் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு, பேக்கிங் சோடா கொஞ்சம், சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
  2. பிறகு அதில் முக்கால் கப் கடலை மாவு, அத்துடன் மைதா மாவு, அரிசி மாவு, சேர்த்து கலந்து மீதமுள்ள கடலை மாவு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  3. குறிப்பாக மாவு தண்ணியாகவும் இருக்காமல், கெட்டியாகவும் இருக்காமல் பக்குவமாக பிசைந்து கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் மாவை பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து பொறித்து எடுக்கவும்.
  5. இப்பொழுது ருசியான வெங்காய போண்டா தயார்.