உடுப்பி பொடி இட்லி இப்படி செய்து பாருங்க! சட்னி, சாம்பார்லா மறந்துருவீங்க!

Summary: வணக்கம் நண்பர்களே. இட்லிக்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிடுவோம். ஆனால் புதுவிதமாக உடுப்பி பொடி இட்லி பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த உடுப்பி பொடி இட்லிக்கு எந்த சட்னியோ, சாம்பாரோ தேவையில்லை. ஒரே ஒரு முறை இந்த உடுப்பி போடி இட்லியை வீட்டில் செய்து பாருங்கள். இட்லி பிடிக்காதவர்களுக்கு கூட, இந்த உடுப்பி பிடி இட்லி கண்டிப்பாக பிடிக்கும். நீங்கள் ஒரே ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால், இட்லி பிரியர்களாக மாறிவிடுவீர்கள். இந்த பதிவில், உடுப்பி பொடி இட்லி எப்படி செய்வது, செயல்முறை என்ன, தேவையான உபகரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Ingredients:

  • 1 கப் உடைச்ச கடலை
  • 3 tsp எண்ணெய்
  • 10 வர மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • புளி
  • 1 கைப்பிடி கருவேப்பிலை
  • 1 tsp சீரகம்
  • 1 tsp பெருங்காயம்
  • 1 கப் தேங்காய்
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1/2 tsp வெள்ளம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி ஜார்

Steps:

  1. முதலில் வெறும் கடாயில் உடைத்த கடலை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். பின் பின் கடாயில் எண்ணெய் சேர்த்து வர மிளகாய் வறுத்தெடுக்கவும். பின்னர் என்னை சேர்த்து, பூண்டு புலி கருவேப்பிலை சேர்த்து நன்கும் வறுத்து எடுக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், பெருங்காயம், துருவி எடுத்த தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து தேங்காய் மொறு மொறு என வரும் வரை நன்கு வறுத்து எடுக்கவும்.
  3. உடுப்பி பொடியை அரைப்பதற்கு முன், சிறிய அளவிற்கு இட்லி ஊற்றிக் கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த, பூண்டு, புளி, கருவேப்பிலை, சீரகம் பெருங்காயம், தேங்காய் இவற்றை சேர்க்கவும்.
  4. அரைக்கும் போது, தேவையான அளவு உப்பு, வெள்ளம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் என்னை சேர்த்து, ஒரு 10 கருவேப்பிலை சேர்த்து, வேக வைத்த இட்லியை கடாயில் சேர்த்து அரைத்து வைத்த குடியை சாரல் போல தூவி, லேசாக கிளறி விட்டு எடுத்தால் சுவையான உடுப்பி பொடி இட்லி தயார்.