உருளைக்கிழங்கு பக்கோடா இனி இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

Summary: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டீ, காபியுடன் சேர்த்து என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த உருளைக்கிழங்கு பகோடா செஞ்சி குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அப்புறம் மீண்டும் எப்பொழுது செஞ்சி தருவீங்கன்னு தொல்லை பண்ணுவாங்க. குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த உருளைக்கிழங்கு பகோடா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 4 உருளைக்கிழங்கு
  • 4 ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • 1 ஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ ஸ்பூன் சீரக பொடி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • களர் பொடி
  • எண்ணெய்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும், பிறகு அதனை தண்ணீரால் கழுவி வெள்ளை துனில் போட்டு ஈரமில்லாமல் துடைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து அதனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் கான்ப்ளவர் மாவு, சிக்கன் மசாலா, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரக தூள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக வெந்ததும் கடைசியாக எண்ணெயில் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் அதில் கொட்டவும்.
  4. இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு பகோடா தயார்.