சுட சுட சுவையான தந்தூரி டீ செய்வது எப்படி ?

Summary: டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது. சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இன்று நாம் சமீபத்தில் பிரபலமாக இருக்கும் தந்துரி டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இந்த தந்துரி டீயை நீங்கள் உங்கள் வீட்டில் போட்டு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அடுத்த முறையும் உங்களை இதையே அடிக்கடி போட சொல்லுவார்கள்.

Ingredients:

  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 புதினா இலை
  • 2 ஏலக்காய்
  • 2 ½ tbsp டீ துள்
  • 2 கிளாஸ் தண்ணீர்
  • 2 கிளாஸ் பால்
  • சர்க்கரை

Equipemnts:

  • 1 மண் சொம்பு
  • 1 டீ பாத்திரம்
  • 1 பெரிய பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு, இதனுடன் ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு துண்டு இஞ்சி, நான்கு புதினா இலை மற்றும் கடைசியாக இரண்டு ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்..
  2. பின் இதனுடன் நீங்கள் வழக்கமாக வீட்டிலே பயன்படுத்தும் டீத்தூள் 2 1/2 டீஸ்பூன் பின் டீக்கு தேவையான சர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை எஏதுவாக இருந்தாலும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு டீ நன்கு கொதித்து வரும் பொழுது இதனுடன் இரண்டு கிளாஸ் அளவிலான பால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின் நாம் வைத்திருக்கும் இருக்கும் மண் சொம்புவை அடுப்பில் தீயை அதிகம் வைத்து மண் சொம்பின் அனைத்து இடத்திலும் தீ படுமாறு காட்டிக் கொள்ளவும். பின்பு மண் சொம்பை அப்படியே அடுப்பின் மேல் வைத்து விடுங்கள்.
  4. பின் நாம் அடுப்பில் வைத்த டீ நன்கு கொதித்து வந்ததும் வேறொரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து டீ யை நன்கு வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் அடுப்பில் வைத்த மண் சொம்பை ஒரு பாத்திரத்தில் உள்ளே வைத்து கொள்ளவும்
  5. பின் நாம் தயார் செய்த டீ யை மன்சொம்பில் ஊற்றிக் கொள்ளுங்கள் இப்போது மண் சொம்பின் சூடு காரணமாக டீ பொங்கி வர ஆரம்பிக்கும் அவ்வளவு தான் நமக்கு மிகவும் பிடித்த சுவையான தந்துரி டீ இனிதே தயாராகிவிட்டது.