ருசியான சைதாப்பேட்டை வடைகறி இப்படி வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள்! செய்வதற்கும் ஈஸி!

Summary: சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு, தற்போது தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரிபோன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை  வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசிஅனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என்றே பருப்பை ஊற வைத்து வடை செய்து இந்தவடகறி தயாரித்தனர். வடகறி உணவு என்பது தற்போது அனைத்து உணவகங்களிலும் மிகவும் பிரபலமாகிவிட்டதுவடகறி இருந்தால். வாங்க இந்தஅருமையான வடகறி எப்படி செய்வது என்று பார்ப்போம்

Ingredients:

  • 250 கிராம் கடலை பருப்பு
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சைமிளகாய்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • உப்பு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி பூண்டு இஞ்சி விழுது
  • பட்டை
  • கிராம்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் கடலைபருப்பை 30 நிமிடம் ஊற வைத்து சோம்பு, ஒரு பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துஎடுத்து வைக்கவும். அரைத்து எடுத்த கலவையை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் நன்றாகவேக வைத்து எடுக்கவும்
  2. வெந்ததும் எடுத்து அதனை படத்தில் உள்ளது போல் நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
  3. அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு மற்றும் அனைத்து பொடிகளை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு அதில் கடலை பருப்பு கலவையும் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. நன்கு கொதித்த பின்பு சுண்டி வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.  பிறகுஅதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து சூடாக பரிமாறவும்.