ருசியான பச்சைப் பயறு குழம்பு இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியம் சத்துக்கள் நிறைந்தது!

Summary: பச்சைப் பயிறு சுண்டல் , முளைகட்டிய பச்சைப் பயிறு  என்றுவைத்து சாப்பிட்டு போரடிக்குதா. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் சுவையான பச்சைப்பயறு குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்தத் குழம்பு ருசியாகஇருக்கும். குறிப்பாக சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த குழம்பு போட்டு கொஞ்சம் நெய் ஊற்றிபிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்திக்கு எல்லாம்எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில், அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியமானஒரு குழம்பு தான் இந்த பச்சைப் பயறு குழம்பு.

Ingredients:

  • 1 கப் பாசிப்பயறு
  • 6 சின்ன வெங்காயம்
  • 8 பூண்டு
  • 1 தக்காளி
  • 1 1/2 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • புளி
  • உப்பு
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து வைக்கவும்.
  2. வெறும் கடாயில் பாசிப்பயறை வறுத்து, தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு, குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து. வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய அனைத்தையும் வேக வைத்த பாசிப்பயறுடன் சேர்த்து மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போகக் கொதிக்கவிடவும்.
  5. பிறகு புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான, சத்தான பாசிப்பயறு குழம்பு தயார்.