நாளை காக்கிநாடா சிக்கன் இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியை தனி தான்!

Summary: சிக்கனில் எத்தனையோ வகை உள்ளது. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் கிரேவி. இந்த சிக்கன் கிரேவி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதை வீட்டிலே சுலபமாக எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த கிரேவி செய்து சுட சுட சாதத்த்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் சப்பாத்தி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 5 சின்ன வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • கொத்தமல்லி
  • 5 முந்திரி பருப்பு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எலுமிச்சை சாறு
  • 2 பட்டை
  • 1 பிரியாணி இலை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் மிளகாய் பொடி
  • 1½ ஸ்பூன் தனியா பொடி
  • கஸ்தூரி மேதி
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிளை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து மசாலா பொடி அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு குக்கரில் சிக்கன் சேர்த்து அத்துடன் 2 பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, பிரியாணி இலை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 1 விசில் வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.
  4. பிறகு ஒரு வாணலில் நெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் முதலில் அரைத்துவைத்துல விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அடுத்து வேக வைத்த சிக்கனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிவிடவும்.
  6. பிறகு இரண்டாவதாக அரைத்தது வைத்த்துல மசாலா பொடியை இதில் சேர்த்து சிக்கனை வேக வைத்த தண்ணீரை இதில் ஊற்றி சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.