மாலை நேர ஸ்நாக்ஸ் பாகற்காய் சிப்ஸ், இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்!

Summary: எப்பொழுதும் சிப்ஸ் வகைகளை  நாம் வெளியில் வாங்கி சாப்பிடுவது உண்டு. குறிப்பாககடைகளில் அதிகம் விரும்பி வாங்கும்  சிப்ஸ்வகையாக இருக்கக்கூடிய இந்த பாகற்காய் சிப்ஸ்ஆரோக்கியமான முறையில்  மொறு மொறுன்னு ரொம்ப சுலபமாக நம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்டநீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகஇருக்கிறது.  பாவற்காய் என்றாலே அனைவரும் பயந்து ஓடுவார்கள், ஏனென்றால்,மற்ற காய்கறிகள் போல் இல்லாமல் இந்த பாவக்காய்க்கு கசப்பு தன்மை அதிகம். ஆகையால் சிறுவர்கள்முதல் பெரியவர்கள் வரை பலருக்கு இந்த பாவக்காய் சாப்பிட பிடிக்காது. ஆனால் அதே பாவக்காயைமொறு மொறு என்று சிப்ஸ் வடிவில் செய்தால் குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும்இதை ஸ்னாக்ஸ் ஆக விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1/2 கிலோ பாகற்காய்
  • டீஸ்புன் இஞ்சி பூண்டு விழுது
  • டீஸ்புன் மிளகாய்த்தூள்
  • டீஸ்புன் கரம்மசாலா
  • டீஸ்புன் கடலை மாவு
  • டீஸ்புன் அரிசி மாவு
  • டீஸ்புன் சோள மாவு
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பாகற்காயை கழுவி விட்டு, நீளவாக்கில் மெல்லியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய் மிகவும் நீளமாக இருந்தால், இரண்டாக வெட்டி, பின்னர் மெல்லிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு மிளகாய்த்தூள், கரம்மசாலா, இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சோ;த்து கலக்கவும்.
  3. பின்னர் இந்த கலவையுடன் பாகற்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிசறி, 15 நிமிடங்கள் ஊற விடவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடானதும், கலவையுடன் கூடிய பாகற்காய் துண்டுகளை எடுத்து, எண்ணெயில் போடவும். காய் நன்றாக மொரு மொருவென்று ஆனதும் அரித்தெடுக்கவும், இப்போது சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி.
  5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இந்த பாகற்காய் சிப்ஸ் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் மாலையில் சிற்றுணவாகவும் சாப்பிடலாம்.