Summary: சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்களை நாம் உட்கொள்ளும் போதும் நாம் சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். ஆகையால் இன்று இந்த தக்காளி ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான முறையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இந்த தக்காளி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.