நாளை சன்டே ஸபெஷலாக ருசியான வாத்து ரோஸ்ட் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: கொஞ்சம்வித்தியாசமான சுவையில் அசைவம் சாப்பிட விரும்புவோருக்கு இதுமிகவும் ருசியாக  இருக்கும். வாத்துக்கறி ரோஸ்ட் பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. ரசம் சாதம் தயிர் சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட அருமையான சைட் டிஷ் இது. புரோட்டா, சப்பாத்தி ,புலாவுக்கு சைடிஷ் ஆகவும் இதைத் தொட்டு சாப்பிடலாம,. அத்தனை அருமையாக இருக்கும். வாத்து இறைச்சி மிகவும் சத்தானது, எலும்பு திசுவை பலப்படுத்துகிறது இரத்த சர்க்கரை அளவை இயல்பாக்குகிறது. வாத்துரோஸ்ட் சுவையு டன்  வாயில் நீர் ஊறவைக்கும்கறி, இந்த வாத்து செய்முறை உங்கள் விருந்துக்கு ஒரு சுவையை கூடுதலாகும்.

Ingredients:

  • 1/2 கிலோ வாத்து கறி
  • 1 கப் பெரிய வெங்காயம்
  • 2 உருளைகிழங்கு
  • 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  • 1 டேபிள்ஸ்பூன் தனியாதூள்
  • 3 டேபிள்ஸ்பூன் மிளகுதூள்
  • 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டேபிள்ஸ்பூன் சோம்புத்தூள்
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் வினிகர்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் உருளைகிழங்கை அரை வேக்காடாக வேகவைத்து ஒவ்வொரு கிழங்கையும் 4 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, ஏலக்காய், பட்டை, கரம் மசாலா, மஞ்சள்தூள், தனியாதூள், மிளகுதூள், சீரகத்தூள், சோம்புத்தூள் இவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  3. சிறிது அரைத்த மசாலாவை தனியாக எடுத்துவைக்கவும். பின்பு கறியை கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் அரைத்த மசாலாவையும், உப்பு, வினிகரையும் சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.
  4. பின்பு எண்ணெய்யை சூடாக்கி அதில் கறித்துண்டுகளை போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.
  5. பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்த மசாலாவை போட்டு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் பொரித்து வைத்துள்ள கறித்துண்டுகளை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  6. கலவை நன்கு கெட்டியாகி இறக்கும் சமயம் உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும். சுவையான வாத்து ரோஸ்ட் தயார்