மதிய உணவுக்கு கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கோவக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

Summary: குழம்பு எத்தனை வகைகள் இருந்தாலும், அசைவத்தில் எப்படி மீன் குழம்பு தனி இடத்தை பிடிக்குமோ, அதைப்போல தான் சைவத்தில் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு.  இப்படிப்பட்ட எண்ணெய்கத்திரிக்காய் குழம்புக்கு கொஞ்சமும் குறைவல்ல இந்த எண்ணெய் கோவக்காய் குழம்பு. இந்த கோவக்காய் போட்டு குழம்புவைத்தாலும் கத்திரிக்காய் குழம்பு சுவைக்கு ஈடாகும். எண்ணெய் கோவக்காய் குழம்பு இந்தபக்குவத்தில் செய்யும் இந்த குழம்பை நீங்கள் ஒரு முறை ருசித்து விட்டால் போதும், இதன்பிறகு கோவக்காயை பார்க்கும் போதெல்லாம் இந்த எண்ணெய் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும்வாங்கஎண்ணெய் கோவக்காய் குழம்பு வைப்பது எப்படி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1/4 கிலோ கோவக்காய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 கப் புளிக் கரைசல்
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 டேபிள்ஸ்பூன் தனியா தூள்
  • 1/4 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வெங்காயம்
  • 10 பூண்டு பல்
  • 1 பச்சை மிளகாய்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கோவக்காய் கழுவி, சுத்தம் செய்து, கீறி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரம் அல்லது குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, கோவக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மையாக அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
  4. புளிக்கரைசல் சேர்த்து, மூடி வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். இந்தக் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மாதிரியே இருக்கும்.
  5. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்