காலை உணவுக்கு ருசியான கேரளா ரவை பலா புட்டு இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ரவா பலா புட்டு. ரவை வைத்து நாம் இட்லி சுட்டு பார்த்திருப்போம் உப்புமா, கிச்சடி கூட செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரவா பலா புட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், உங்களுக்கே அடிக்கடி சாப்பிட தோன்றும். சட்டென செய்யக்கூடிய சுவையான இந்த காலை உணவை சமைத்து விட்டால் வேலை சுலபமாக முடியும். இதனை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரவா பலா புட்டை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 200 கிராம் ரவை
  • 125 gm சக்கரை
  • 3 tbsp நெய்
  • 2 ஆரஞ்சு
  • 50 gm கறுப்பு திராட்சை
  • 75 gm தக்காளிப்பழம்
  • 1 ஆப்பிள்
  • 50 gm முந்திரி பருப்பு
  • 1 tbsp வெனிலா எசன்ஸ்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. ரவா பலா புட்டை செய்ய முதலில் அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  2. அதை துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ரவையைக் கொட்டி வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின் ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழம், தக்காளி இவற்றைத் தனித்தனியே சாறு எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
  4. அதனை பழச்சாற்றில் அளவாக தண்ணீர் விட்டு அதை அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும்.
  5. பிறகு வறுத்த ரவையை அதில் கொட்டி கிளறி பாதி வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீதமுள்ள நெய்யை விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கிவிட வேண்டும்.
  6. தேவையென்றால் வெனிலா எசன்ஸ் விட்டு நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி, மேலே முந்திரி துண்டுகளை பரவலாகப் போட்டு அலங்கரிக்கவும். இதற்குக் கலர், ஏலக்காய் தேவையில்லை.சுவையான ரவா பலா புட்டு ரெடி.