நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி ?

Summary: பேக்கரி மட்டும் ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை தான் குழந்தைகள் பெரும்பாலூம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்மளும் குழந்தைகள் கேட்கிறார்கள் என பாவம் பார்த்து வாங்கி கொடுத்து விடுவோம். இனி இந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள் இனிமேல் உங்கள் குழந்தைகள் இது போன்ற உணவுகளை கேட்கும் பொழுது நீங்களே வீட்டில் தயார் செய்து கொடுங்கள். ஆம் இன்று காபி புட்டிங் பற்றி தான் பார்க்க இருக்கிறோம், தாறுமாறான சுவையில் இருக்கும் காபி புட்டிங் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாறு இருக்கும். ஆகையால் இன்று இந்த காபி புட்டிங் எப்படி செய்வது, தேவையான பொருள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 6 பேக்கரி பிஸ்கட்
  • 2 tbsp நெய்
  • ½ liter பால்
  • 2 ½ tbsp காபி தூள்
  • ½ tbsp வெண்ணிலா எசென்ஸ்
  • ½ tbsp பட்டை தூள்
  • ½ கப் சர்க்கரை
  • 2 ½ tbsp சோள மாவு
  • ¼ கப் பால்
  • ¼ கப் சாக்லெட் துருவல்

Equipemnts:

  • 4 கண்ணாடி கிளாஸ்
  • 1 டீ பாத்திரம்
  • 2 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பேக்கரியில் விற்கும் பெரிய பிஸ்கட் ஆறு பிஸ்கட் எடுத்துக்கொண்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் மிக்ஸியில் அரைத்த பிஸ்கட் தூளை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து நன்கு கலந்து விட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின் டீ போடும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் அதிக கொழுப்புள்ள பாலை சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். பின் இரண்டு அரை டீஸ்பூன் காபி தூள், அரை டீஸ்பூன் அளவு பட்டை தூள், அரை கப் அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு பவுளில் இரண்டு அரை டீஸ்பூன் சோள மாவு சேர்த்து அதனுடன் அரை கப் அளவு பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கி அடுப்பில் வைத்திருக்கும் காபியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள், பின் மிதமான தீயிலே பாலை வைத்து கிளரி கொண்டே இருங்கள்.
  4. பின் காபி கெட்டியான பதத்திற்கு வரும் வரை கலக்கி கொள்ளவும், பின் காபி கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் பாலை இறக்கி நான்கு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொண்டு, அதன் அடிப்பாகத்தில் பிஸ்கட் தூளை சேர்த்து சமமாக்கி கொள்ளவும். பின் அதன் மேல் நாம் தயார் செய்து வைத்திருந்த காபியை முக்கால் டம்ளர் அளவு ஊற்றவும்.
  5. பின் நான்கு டம்ளரையும் ஒரு மணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு காபி நன்கு கெட்டியான பிறகு அதன் மேல் நாம் வைத்திருக்கும் சாக்லேட் துருவலை தூவி விடுங்கள் அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் காபி புட்டிங் இனிதே தயாராகி விட்டது.