சரவணா பவன் ஸ்பெஷல் ருசியான சாம்பார் வடை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: தென்னிந்தியா முழுவதும் பலர் அனுபவிக்கும் கிளாசிக் காலை உணவு காம்போக்களில் இதுவும் ஒன்று. ஊறிய வடையுடன் கூடிய இந்த சாம்பாரை சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் சாம்பார் வைத்து செய்யக் கூடிய சூப்பரான வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த வடையை செய்ய அதிகமாக எந்த பொருட்களும் தேவைப்படாது. சட்டுனு வடை சுட்டு சாம்பார் ஊறவைத்தால் சுவையான சாம்பார் வடை ரெடி செஞ்சிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாம்பார் வடை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ cup உளுத்தம்பருப்பு –
  • 2 பச்சை மிளகாய்
  • ½ cup நறுக்கிய பெரிய வெங்காயம்
  • ¼ cup நறுக்கிய மல்லித்தழை
  • 1 tbsp நெய்
  • ¼ tsp கடுகு
  • பொரிக்க எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய கண் கரண்டி

Steps:

  1. சாம்பாரை நீங்கள் எப்போதும் செய்வது போல் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.
  2. உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் , தேவையான அளவு உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.
  3. எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள்.
  4. 5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதேபோல செய்யுங்கள். பரிமாறும் பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.