தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் இப்படி செய்து பாருங்க!

Summary: தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும்.மிகவும் சுவையாக இருக்கக்கூடும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று இதை எப்படி வீட்டில் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள் அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • ½ கப் கடலை பருப்பு
  • ½ கப் பாசிப்பருப்பு
  • ¾ கப் தேங்காய்த் துருவல்
  • 1 கப் பொடித்த வெல்லம்
  • ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • ½ டீஸ்பூன் சுக்கு பொடி
  • 1½அல்லது 2 கப் புட்டு மாவு
  • நெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வறுத்து வேகவைத்து தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய் தூள், சுக்குப் பொடி, சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
  2. புட்டு மாவில், உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்து பிசிறி இட்லித் தட்டில் சேர்த்து ஆவியில் வேகவைக்கவும்.
  3. புட்டு இட்லியை பருப்பு கிரேவியுடன் நெய் சேர்த்துச் சாப்பிடவும்.
  4. தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும்.