மட்டன் கீமா வாங்கி இப்படி வடை சுட்டுப் பாருங்க! வாழ்க்கையில் இந்த டேஸ்டை மறக்கவே மாட்டீங்க!

Summary: மட்டன் கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கக்கூடிய இந்த மட்டன் கீமாவில் ‘வடை’ இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள். இந்தடேஸ்டை சாப்பிடுபவர்கள் சாகும் வரை மறக்கவே மாட்டார்கள். மட்டன்,  நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச்செய்து, இதயத்தை  வலிமைப்படுத்த நல்ல தீர்வாக உள்ளது எலும்பினை வலுப்படுத்துகிறதுபல்வேறு போன்ற மருத்துவ பலன்களும் உள்ளது.. மட்டன் உணவு வகைகள் அனைத்துமேகொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையானரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை.  இந்த கோலா உருண்டையை சுவையாகவும்,சுலபமாகவும் செய்யலாம்.  அந்த அளவிற்குசுவையாக இருக்கக் கூடிய இந்த எளிதான கறி கீமா வடை எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கப் கடலைப் பருப்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 கிலோ மட்டன் கீமா
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • சிறிதளவு மல்லி தழை
  • 2 ஸ்பூன் சோள மாவு
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • சமையல் எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மட்டன் கீமாவை சுத்தம் செய்து  வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் ஒரு மணி நேரம் கடலைப் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறப் போட்டுக் கொள்ளுங்கள்.ஒரு மணி நேரம் கழித்துபருப்பை மட்டும் மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. இதனுடன் காரத்திற்கு ஒரே ஒரு பச்சை மிளகாய் மற்றும் வாசனைக்கு ஒரு ஸ்பூன் சோம்பு பிரஷ்ஷாக சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்தவிழுதுடன், நீங்கள் மட்டன் கீமாவையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  3. பின் தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை உதிர்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.ஒரு ஸ்பூன் அளவுக்கு இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். இஞ்சி பூண்டு துண்டுகளாகநறுக்கியும் சேர்க்கலாம்.
  4. பிறகு இதனுடன்ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி சேருங்கள்.பின்னர் அதன் மீது அரை ஸ்பூன் அளவுக்கு சீரகத்தை தூள் செய்து சேர்க்க வேண்டும்.
  5. இதனுடன் ஒரு ஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் கான்பிளவர் மாவு, கால் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.கெட்டியாக வடை மாவு பதத்திற்கு இருக்கும், இதில் தண்ணீர் எதுவும் கொஞ்சம் கூட சேர்த்துவிடக் கூடாது
  6. எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து விட்ட பின்பு, சிறு சிறு வடைகளாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.இதை அடுப்பில் சூடான எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் சிவக்க மிதமான தீயில் வைத்துபொரித்து எடுத்தால் அவ்வளவு சுவையான மட்டன் கீமா வடை ரெசிபி தயார்!