இட்லி, பொங்கல், தோசைக்கு மட்டும் இல்ல சாதத்துக்கு கூட கத்திரிக்காய் இட்லி சாம்பார் இப்படி செய்து பாருங்க!

Summary: என்னதான்இட்லிக்கு சட்னி வெரைட்டியா வச்சாலும் கத்திரிக்காய் சாம்பாருக்கு இணையே இல்லைங்க.மணக்க மணக்க கத்திரிக்காய் இட்லி சாம்பார் இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்ய ஆரம்பித்துவிடுவீங்க. பொதுவாக பொங்கலுக்கு கத்திரிக்காய் இட்லி சாம்பார் செய்வது உண்டு. குறைந்தபொருட்களை வைத்து சட்டுனு பத்து நிமிஷம் கூட ஆகாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல்என்று  வகையான பல டிபன் வகைகளுக்கும், சூடான சாதத்துடனும் சாப்பிட கத்திரிக்காய்இட்லி சாம்பார்  அருமையாக இருக்கும். நொடியில் தயாரிக்க கூடியஇந்த சாம்பார் பணியாரம், ஊத்தாப்பம், தோசை, இட்லி போன்றவற்றுக்கு சூப்பரான காம்பினேஷன்ஆக இருக்கும்.

Ingredients:

  • 1/4 கிலோ கத்திரிக்காய்
  • 1 கப் துவரம் பருப்பு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 3 இலை கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  • 1 தேக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. துவரம் பருப்பினை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  2. கத்திரிக்காய் , வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் பச்சை மிளகாய் போடவும்.
  4. இவை அனைத்துடனும் 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். குக்கரின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு கரண்டியை வைத்து மசித்து விடவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை வேக வைத்து மசித்து வைத்திருக்கும் காய்களுடன் போட்டு கிளறி விடவும்.  சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் ரெடி.