கொத்த மல்லி நிலக்கடலை சட்னி செய்வது எப்படி ?

Summary: நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற அமினா அமிலம் செரட் டோனின் என்ற மூளை பகுதியை உற்சாகப்படுத்துகிறது. மேலும் நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கும் ஞாபகம் சக்தியே வளர்ப்பதற்கும் உதவியாக இருப்பதால் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இந்த சட்னியை செய்து குடுங்கள் மேலும் ருசி என்று எடுத்துக் கொண்டால கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த நிலக்கடலை சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் நிலைக்கடலை
  • 10 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 5 பச்சை மிளகாய்
  • புளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 கொத்து கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp உளுந்தம் பருப்பு
  • கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்துள்ள நிலக்கடலையை கடாயில் போட்டு நன்கு வறுக்கவும். நிலக்கடையில் நன்றாக மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு பற்கள், இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், புளி கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் வறுத்த நிலக்கடலை போன்ற பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு சட்னி நன்கு அரைபட்டதும் இதனுடன் உப்பு சேர்த்து அதன் பின் சிறிது தண்ணீர் சேர்த்து மறுபடியும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  4. பின் நாம் அரைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் இருந்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  5. அதன் பின் எண்ணெய் நான்கு காய்ந்ததும் எண்ணெயில் கடுகை சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொரிந்தும், உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் பொருட்களை போட்டு நன்றாக தாளிக்கவும்.
  6. பின் இந்த தாளிப்பை சட்னியுடன் ஊற்றி கலக்கி கொள்ளவும் அவ்வளவுதான் சுவையான ருசியான கொத்தமல்லி நிலக்கடலை சட்னி தயாராகிவிட்டது.