ரோட்டு ஒர கடை ஸ்டைலில் காளான் செய்வது எப்படி ?

Summary: ஒவ்வொரு ஊர்களிலும் அந்த ஊருக்கென பிரபலமான ஒரு ஸ்னாக்ஸ் உணவு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் நம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரோட்டு ஓரமான கடைகளில் விற்கும் காளான் கிரேவி மிகவும் பிரபலமானது. இன்று நாம் அந்த ரோட்டு ஒர கடைகளின் காளான் கிரேவி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காளான் மற்றும் முட்டைகோஸை சேர்த்து நாம் காளான் கிரேவி செய்து நாம் சாப்பிடும் போது அதன் ருசி அட்டகாசமான முறையில் இருக்கும். அதனால் இன்று ரோட்டு ஒர கடையின் காளன் கிரேவி எளிமையான முறையில் வீட்டில் வைத்து எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 200 கிராம் முட்டைகோஸ்
  • 200 கிராம் காளான்
  • 1 கப் மைதா மாவு
  • ¼ கப் சோளமாவு
  • 1 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • உப்பு
  • எண்ணெய்
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • 3 தக்காளி
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 tbsp மல்லி தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • 1 tbsp கான்பிளவர் மாவு
  • 1 கப் தண்ணீர்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. ஒரு பெரிய பவுளில் பொடியா நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் காளான்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வடிகட்டி கொள்ளுங்கள். அதன் பின் இதனுடன் மைதா மாவு, சோள மாவு, காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
  2. சிறிதளவு மட்டும் இதனுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் அப்போதுதான் மாவு கெட்டியான பதத்திற்கு வரும். பின் மாவு கெட்டியாக பிசைந்து முடித்தவுடன் ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு நன்றாக சிவக்கும் வரை பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் பொறித்து எடுத்த காளான் உருண்டைகளை செய்து சிறிது சிறிதாக உடைத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேற்றவும்.
  4. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வதக்கி பின் மூன்று தக்காளிகளை மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  5. இப்பொழுது மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின் பச்சை வாடை போய் நன்றாக வெந்து வந்ததும் ஒரு பவுளில் 1 டீஸ்பூன் கான்பிளவர் மாவு எடுத்து அதனுடன் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து அதனை கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின் நாம் சேர்த்த வெங்காயம் தக்காளி அனைத்தும் தண்ணீருடன் நன்கு வதங்கி வந்ததும் நாம் சிறிய துண்டுகளாக உடைத்து வைத்திருக்கும் காளாணையும் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள் காளான் நன்றாக வதங்கி வந்ததும் அதன் மேல் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி விடுங்கள் அவ்வளவுதான் ரோட்டு ஒர கடைகள் காளான் இனிதே தயாராகிவிட்டது