காரசாரமான வெண்டைக்காய் ப்ரை செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் வெண்டைக்காய் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த வெண்டைக்காய் ப்ரையை அதிகமாக கல்யாண வீடுகளில் பரிமாறி பார்த்திருப்பீர்கள். இந்த வெண்டைக்காய் ப்ரையை தயிர் சாதம், பால் சாதம், சாம்பார் சாதம் போன்ற உணவுகளுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது தாறுமாறான சுவையை நமக்கு தரும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ப்ரையாக மாறிப் போகும். அதனால் இன்று காரசாரமான வெண்டைக்காய் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 KG வெண்டைக்காய்
  • ¼ கப் கடலை மாவு
  • ¼ கப் அரிசி மாவு
  • 1 tbsp சோள மாவு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • 1 tbsp சீரகத் தூள்
  • 1 tbsp உப்பு
  • தண்ணீர்
  • எண்ணெய்
  • 1 tbsp எண்ணெய்
  • 5 முந்திரி
  • ¼ கப் வேர்கடலை
  • 6 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • ½ tbsp உப்பு
  • 1 tbsp மிளகாய் தூள்

Equipemnts:

  • 3 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் ஒரு கிலோ வெண்டைக்காயை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு வெண்டைக்காயின் மேற்பகுதியும் கீழ் பகுதியும் வெட்டிவிட்டு பின் வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு பவுளில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயுடன் சேர்த்து நன்கு பிரட்டி விட்டுங்கள்.
  3. அதன் பின் சிறிது தண்ணீர் சேர்த்து வெண்டைகாயை பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின் இந்த மசாலா கலந்த வெண்டைக்காயை ஒரு 15 நிமிடங்கள் இப்படியே ஊற வையுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  4. பின் எண்ணெய் சூடாகியவுடன் நம் மசாலா கலந்த வெண்டைக்காயை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  5. எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் முதலில் முந்திரி பருப்பை கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஒரு பவுளில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயில் கால் கப் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுத்து அதனையும் பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின்பு கீரிய பச்சை மிளகாயை கடாயில் சேர்த்து நன்கு வதக்கி அதனையும் அந்த பவுளில் சேர்த்து கொள்ளவும். பின்பு பூண்டு பற்களை தோலுடன் நசுக்கி அதையும் கடாயில் சேர்த்து நன்கு வறுத்து பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  7. பின்பு ஒரு கொத்து கருவேப்பிலையை கடாயில் சேர்த்து அதையும் வறுத்து பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள், பின் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நாம் வறுத்த பொருட்களுடன் நன்றாக கலந்து கொள்ளவும்
  8. பின் நாம் வறுத்து மிளகாய் தூள் சேர்த்து கலந்த கலவையை. நாம் பொறித்து வைத்திருக்கும் வெண்டைக்காயுடன் சேர்ந்து கலந்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் காரசாரமான வெண்டைக்காய் ப்ரை இனிதே தயாராகிவிட்டது.