மீதமான சாதத்தில் ருசியான வெங்காய வடகம் இப்படி செய்து பாருங்கள்! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!

Summary: இந்த அப்பளம்,வடகம் போன்றவற்றையெல்லாம் முன்பெல்லாம் வீட்டில் செய்து தான் சாப்பிடுவார்கள். இந்தவத்தல், வடகம் போன்றவற்றை செய்வதற்கு அனைவருமே சிரமப்படுவார்கள். ஏனென்றால் அதை காய்ச்சி,ஆற வைத்து அதன் பிறகு காய வைத்து என அதன் வேலைகள் இருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலும்இவையெல்லாம் வீட்டில் செய்வதை தவிர்த்து விடுவார்கள். கஷ்டமேஇல்லாமல் மிக மிக சுலபமான முறையில் சாதம் மீந்து போனதை வைத்து சுலபமாக வெங்காய வடகம்தயாரித்து வைத்து கொள்ளலாம்.

Ingredients:

  • 300 கிராம் சாதம்
  • 200 கிராம் வெங்காயம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 7 தேக்கரண்டி செத்தல் மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • 1 தேக்கரண்டி உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள்அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. முதலில் செத்தல் மிளகாய், சோம்பு. மிளகு ஆகியவற்றை அரைக்கவும். அதன் பின்னர்சாதத்தையும் அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  3. பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் அரைக்கவும். அரைத்த எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில்எடுத்துக் கொண்டு அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  4. பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு தட்டில் அலுமினியப்பேப்பரை விரித்து அதில் இந்த உருண்டைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாதபடி தட்டி வைக்கவும்,
  5. இருபக்கமும் நன்கு காயும்படி திருப்பி திருப்பி வைத்து வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். இதைப்போல் வடகம் நன்கு காயும் வரை வைத்தெடுக்கவும்.
  6. தேவையான போது எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான வெங்காய வடகம் தயார்.