இறால் அவரை பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! நாவில் எச்சில் ஊறும் சுவையில்!

Summary: இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படிசமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள்  சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்துசெய்யக்கூடிய ஒரு இறால் அவரை பொரியல் தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும்வெங்காயம், தக்காளி , அவரை இவை அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். இறாலில்அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.இறாலை அவரைக்காயுடன் சேர்த்துசெய்வதால் இறால் , அவரைக்காயின் சத்து  சேர்த்துகிடைக்கப்பெறும். அவரைக்காய் இறாலுடன் சேர்ப்பதால் இறாலின் வாசம் அவரைக்காயில் சேர்ந்துஅவரைக்காய் சாப்பிடாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 10 இறால்
  • 10 அவரைக்காய்
  • 1 வெங்காயம்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகத் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அவரைக்காயை மெல்லிய சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய இறாலாக இருப்பதால் இரண்டாக நறுக்கி வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். இறாலுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள், சீரகத் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
  3. பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றிக் கிளறிவிட்டு, இறாலைச் சற்று நேரம் வேகவிடவும்.
  4. தண்ணீர் வற்றி இறால் அரை வேக்காடு வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் அவரைக்காயைச்சேர்த்து பிரட்டவும், நன்றாகப் பிரட்டிவிட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்,
  5. இறால் வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும். சுவையான இறால் அவரை பொரியல் தயார்.