இந்த வாரம் இறுதியில் ருசியான பஞ்சாபி மட்டன் மசாலா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Summary: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை செய்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? அதுவும் சாதத்திற்கும், சப்பாத்தி, பூரிக்கும் பொருத்தமான மட்டன் சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் அதற்கு பஞ்சாபி மட்டன் மசாலா சரியான தேர்வாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியின் சிறப்பே குக்கரில் செய்யாமல், கடாயில் செய்வது தான். மேலும் இந்த ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையானதாக இருக்கும்.

Ingredients:

  • 500 கிராம் மட்டன்
  • 1 டேபிள் ஸ்பூன் உப்பு
  • 1/4 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 பட்டை
  • 6 ஏலக்காய்
  • 1 கருப்பு ஏலக்காய்
  • 6 இலவங்கம்
  • 1 பிரியாணி
  • 100 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி நறுக்கியது
  • 1/4 கப் எண்ணெய்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் காஷ்மிரி மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம்
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கசூரி மேத்தி
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் மட்டனில் ஊற வைக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை சேர்த்து நன்கு கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அரைக்க வேண்டிய பொருட்களை சிறிதளவு எண்ணெய் விட்டு நன்றாக வறுத்து நைசாக அரைத்து வைக்கவும்.
  3. பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. பின் இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் மட்டனை சேர்த்து5 நிமிடம் வதக்கவும்.
  5. தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  6. பின்னர் இதில் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
  7. பிறகு மூடியைத் திறந்து கசூரிமேத்தி, சிறிதளவு கரம் மசாலா கொத்தமல்லித்தழை தூவி கலந்து 2நிமிடம் வேக வைத்து இறக்கவும்.