மணக்க மணக்க ருசியான நெத்திலி கருவாடு ஃப்ரை சுலபமாக வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க!

Summary: ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டுபிரியர்களுக்கு நெத்திலி கருவாடு என்றால் சொல்லவே வேண்டாம், எச்சில் ஊறஆரம்பித்து விடும். மீனாக மட்டுமல்ல, கருவாடாக மாறிய பின்னரும் மங்காத மவுசு நெத்திலிக்குஉண்டு அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்வதுமுதல் ருசியாக ஃப்ரை செய்து குடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பாட்டை ஒரு புடிபிடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு இந்த சுவையும் மனமும் அருமையங்க இருக்கும். வரை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நெத்திலி கருவாடு சாப்பிட்டால்காய்ச்சல், தலை வலி, முதுகுவலி போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது..

Ingredients:

  • 2 கைப்பிடி நெத்திலி கருவாடு
  • 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • புளி
  • 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 வரமிளகாய்
  • 5 கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கருவாடை நன்கு மஞ்சள் மற்றும் புளித்த மோர் போட்டு கழுவி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். புளியை ஊற வைக்கவும்.
  2. கருவாடை மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, புளி இவற்றோடு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. பின் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் போட்டு தாளித்து கருவாடை அதில் போடவும்.
  4. கருவாடு நன்கு முறுக்கு போல ஆகும் வரை பொரிக்கவும்.
  5. க்ரிஸ்பியான,சுவையான கருவாடு ஃப்ரை ரெடி.