அட்டகாசமான சுவையில் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி ?

Summary: சிக்கன் ரெசிபிகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த உணவு என்றால் அதில் இந்த ரோஸ்ட் சிக்கன் தான். அவர்களுக்கு இதில் இருக்கும் காரசாரமான சுவையும், அதிலிருந்து வரும் நல்ல மணமும் மிகவும் பிடித்தபோய் இருக்கும். நீங்கள் இந்த ரோஸ்ட் சிக்கனை ஒரு முறை வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு சிக்கன் ரெசிபி ஆக இந்த ரோஸ்ட் சிக்கன் மாறி போகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் பின்பு அடிக்கடி அவர்கள் இந்த சிக்கன் ரெசிபியை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.

Ingredients:

  • ½ KG சிக்கன்
  • 1 முட்டை
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp அரிசி மாவு
  • 1 tbsp சோள மாவு
  • ¼ tbsp மிளகு தூள்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • உப்பு
  • பொரித்த சிக்கன்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 வர மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பெரிய வெங்காயம்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp சீரகத்தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 tbsp மல்லி தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • 2 தக்காளி
  • 1 கப் தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வாங்கி வைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் வைத்து நான்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின் சிக்கனை ஒரு பெரிய பவுளில் மாற்றி அதனுடன் முட்டை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகுத்தூள் மற்றும் அரை எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
  2. பின்பு இந்த மசாலா கலந்த சிக்கனை ஒரு அரை மணி நேரம் அப்படியே நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் மசாலா கலந்து வைத்த சிக்கனை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் சிக்கனை பொரித்து எடுத்த பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் எண்ணெய் சுடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து 10 வினாடிகள் வதக்கி விடவும்.
  4. அதன் பின்பு நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன் அதனுடன் மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  5. வெங்காயத்துடன் மசாலா நான்கு கலந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், தக்காளி நன்கு மென்மையாக வெந்து வந்ததும் இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  6. பின் நாம் பொறிந்து வைத்திருக்கும் சிக்கனையும் கடாயில் சேர்த்து கிளறி விடுங்கள் அதன் பின் ஒரு பத்து நிமிடம் கடாயை மூடி வைத்து சிக்கன் நன்றாக வெந்து ரோஸ்ட் ஆகி வந்திருக்கும் அவ்வளவுதான் சுவையான ரோஸ்ட் சிக்கன் இனிதே தயாராகி விட்டது.