சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு செய்வது எப்படி ? வாருங்கள் செய்து பார்க்கலாம்...

Summary: அதுமட்டுமில்லாமல் புளிக்குழம்பு என்று சொன்னால் சொன்னால் யார் தான் பிடிக்காது என்று சொல்வார்கள். இன்று சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வது, அதற்கு தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • 12 வெண்டைக்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 5 tbsp புளி சாறு
  • உப்பு
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 2 மிளகாய்
  • கருவேப்பிலை
  • 4 tbsp நல்லெண்ணெய்
  • ½ கப் தேங்காய் துருவியது
  • 2 tbsp மல்லி
  • 4 மிளகாய்
  • 5 tbsp புளி குழம்பு மசாலா

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. செய்முறை
  2. முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் 3 டீஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடேறும் வரை காத்திருக்கவும் சூடு ஏறியதும் தாளிப்பதற்காக வைத்துள்ள பொருட்கள்.
  3. கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்பு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளியின் பச்சை வாடை போய் மென்மையாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு நாம் எடுத்து வைத்துள்ள வெண்டைக்காயை உங்களு ஏற்றவாறு நறுக்கி 6 லிருந்து 10 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பின்பு இதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்க்கவும்.
  6. தேங்காய் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும், அதன் பின்பு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். பிறகு புளியை கரைத்து தயார் செய்துள்ள புளிச்சாற்றினை ஊற்றுங்கள்.
  7. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். குழம்பு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும் இப்பொழுது சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயாராகிவிட்டது.