சிக்கன் கிரேவினா அது இப்படி தான் செய்யனும் என்றளவுக்கு கார்நாடகா சிக்கன் கிரேவி இப்படி செய்து பாருங்க!

Summary: அசத்தலான சுவையில் கர்நாடக மட்டும் அல்லாமல் பல்வேறு மக்களுக்கு பிடித்த கர்நாடக ஸ்பெஷல் சிக்கன் கிரேவி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள் பின்னர் வாரம் ஒருமுறையாவது செய்யாம்மல் இருக்க மாட்டீர்கள், இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 350 gm சிக்கன்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 3 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp மல்லித் தூள்
  • ½ tsp மிளகுத்தூள்
  • 2 tbsp எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
  2. இப்போது சிக்கன் சேர்க்க வேண்டும். வெந்ததும் தக்காளி சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்னர் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
  3. பின்னர் மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
  4. 25நிமிடம் மிதமான தீயில் காடாயினை மூடி வைக்க வேண்டும். பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து கிளற வேண்டும், சுவையான கர்நாடக சிக்கன் கிரேவி ரெடி.