தித்திக்கும் சுவையில் நேந்திரன் பழ பாயாசம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Summary: பிரதமன்’ என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டுபல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன் ரொம்பவே சுவை தரும் ஒரு ரெசிபி வகையாகும்.இந்த பதிவில் நேந்திரன் பழம் வைத்து சுவையானபிரதமன் என்பதை தான் பார்க்க இருக்கிறோம். குறிப்பாக அடை பிரதமன் ரொம்பவும் பிரசித்திபெற்றதாக இருக்கிறது. அதே போல செய்யப்படும் இந்த நேந்திரன் பழ பிரதமன் மிகுந்த சுவையுடன்இருக்கும். ஒல்லியானவர்கள் நேந்திரம் பழத்தை அவித்து சாப்பிடுவதனால் உடல் எடை நன்கு அதிகரிக்கும்

Ingredients:

  • 1 நேந்திரன் பழம்
  • வெல்லம்
  • 1/2 முதல் பால் தேங்காய்ப் பால்:
  • 1/2 இரண்டாம் பால் தேங்காய்ப் பால்:
  • 2 ஏலக்காய்
  • 1 தேக்கரண்டி நெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
  2. நேந்திரன் பழத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும். வேக வைத்த பழத்தின் தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டுக் கூழாக அடித்துக் கொள்ளவும்.கட்டியில்லாமல் மசித்து கொள்ளவும்.
  3. அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும்.வெல்ல கரைசலுடன் மசித்த பழக்கூழை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.
  4. அதனுடன் இரண்டாம் தேங்காய்ப்பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் பொடித்த ஏலக்காய் மற்றும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து சூடானதும் இறக்கி விடவும்.
  5. சுவையான நேந்திரன் பழ பிரதமன் தயார்.நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி பரிமாறவும்.