டீக்கடை வாழைப்பூ வடை இப்படி செய்து பாருங்க! அதன் சுவையின் ரகசியம் இது தான்!

Summary: நீங்கள் வீட்டில் மாலை நேரம் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் மற்றும் வடைகளை செய்வதற்கு பதிலாக நீங்கள் டீக்கடைகளில் எப்போதும் விரும்பி சாப்பிடும் வாழைப்பூ வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுங்கள் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.

Ingredients:

  • 1 கப் கடலை பருப்பு
  • 2 வாழைப்பூ
  • 1 வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை
  • 5 பல் பூண்டு
  • உப்பு
  • பெருங்காய பொடி
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் கடலை பருப்பை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து அதனை சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
  2. பிறகு வாழைப்பூ கொண்டை பகுதியை மட்டும் தவிர்த்து மீதியுள்ளதை நன்கு அறிந்துகொள்ளவும்.
  3. பிறகு அரைத்த கடலை மாவில் இவற்றை சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, கருவேப்பிலை, பூண்டு, பெருங்காய பொடி சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
  4. பின் பருப்பு வடை பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தீயை மிதமாக ஏறிய விட்டு.
  5. பின் நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுட சுட வாழைப்பூ வடை தயார்.