மஞ்சள் பூசணிக்காயை புளிப்பும், இனிப்புமாக இப்படி ஒரு முறை எரிச்சேரி செய்து பாருங்கள், சப்பு கொட்டி சாப்பிடுவீங்க!

Summary: “எரிசேரி” என்பது பழந்தமிழர்களின் உணவு ஆனால் தற்காலத்தில் இது கேரளா மாநிலத்தவர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு பிரபல உணவாக இருக்கிறது. இதில் வாழைக்காய் சேனைக்கிழங்கு போன்றவைகளை சேர்த்து செய்வதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக கேரளாவில் உள்ளது. மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.

Ingredients:

  • 1 மஞ்சள் பூசணி
  • 1 கப் காராமணி பயிறு
  • 3 துண்டு தேங்காய்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • உப்பு
  • 1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 2 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  • 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. மஞ்சள் பூசணியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காராமணி பயிறை வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் நறுக்கின மஞ்சள் பூசணிக்காயை போட்டு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்..மிக்ஸியில் தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
  4. பூசணிக்காய் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறி விடவும்.  5 நிமிடங்கள்கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பயிறை போட்டு கிளறவும்.
  5. இந்த கலவை 10 நிமிடம் வரை நன்கு கொதித்ததும் இறக்கி வைத்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் எரிச்சேரியில் கொட்டவும். சுவையான எரிச்சேரி தயார். இது ஒரு கேரளா வகை கூட்டு.