காரசாரமான காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

Summary: உடல் எடையை குறைக்கும் நினைப்பவர்கள் அனைவரும் எவ்வளவு வேண்டுமானாலும் காலிஃபிளவரை பொரியல் கூட்டு என்று தயார் செய்து சாப்பிட்டால் அதனால் அவர்கள் உடம்பில் கொழுப்பு அதிகரிக்காமல் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் இதுபோன்று காலிஃபிளவர் பேப்பர் ப்ரை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாக இது மாறி போகும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • ½ கப் மைதா மாவு
  • ¼ கப் சோளமாவு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • ½ KG காலிஃபிளவர்
  • 2 tbsp மிளகு
  • 1 tbsp சீரகம்
  • ¼ tbsp சோம்பு
  • 3 tbsp எண்ணெய்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 வர மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 tbsp மல்லி தூள்
  • உப்பு
  • கொத்த மல்லி இலை

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் காலிஃப்ளவர் பொரிப்பதற்கு ஒரு பெரிய பவுலில் 1/2 கப் மைதா மாவு, கால் கப் சோள மாவு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின் ஒன்றாக கலந்த மாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு சற்று தண்ணீர் பதத்திற்கு இருக்கும் வரை தயார் செய்து கொள்ள வேண்டும் அன்பின் மேல் நாம் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் காலிபிளவர்களை எடுத்து நாம் தயார் செய்த மாவுடன் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நம் மாவில் பிரட்டி எடுத்த காலிஃபிளவர்களை எண்ணெயில் போட்டு நன்றாக பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் மிக்ஸியில் காலிபிளவர் பேப்பர் ப்ரை மிளகு அரைக்க மிக்ஸி ஜாரில் 2 டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக பொடிப்பொடியாக அரைந்து கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றில் அதனுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  6. இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பின்பு வெங்காயம் நன்றாக வதங்கியதும் என்னுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  7. அதன் பின் நாம் பொரிந்து வைத்திருக்கும் காலிஃப்ளவரையும் என்னுடன் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் மிளகுத்தூள் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொள்ளவும்.
  8. கடைசியாக 5 நிமிடம் நன்றாக கிளறிவிட்டு சிறிது கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் காரசாரமான காலிஃபிளவர் பெப்பர் ப்ரை இனிதே தயாராகிவிட்டது.