இட்லி தோசைக்கு ஏற்ற மதுரை நீர் சட்னி இப்படி செய்து பாருகங்க! ஒரு மாறுதலாக இருக்கும்!

Summary: இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் நீர் சட்னி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பொதுவாக நம் வீட்டில் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி இந்த இரண்டு சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம். இது நமக்கே சலித்து போய் இருக்கும். அதனால் நாமளும் வழக்கமாக இந்த இரண்டு சட்னிகளை மற்றும் செய்யாமல் இதுபோன்று மதுரை ஸ்பெஷல் நீர் சட்னியும் செய்து சாப்பிடலாம். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், அதே நேரம் இரண்டு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் மூன்று தோசை கூட சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 tsp எண்ணெய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி புதினா
  • 1/4 கட்டு மல்லி இலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 2 tsp பொட்டுக்கடலை
  • 2 tsp வறுத்த வேர்க்கடலை
  • உப்பு
  • இஞ்சி
  • 3 பூண்டு
  • புளி
  • 1 1/2 டம்ளர் தண்ணீர்
  • 3 வர மிளகாய்
  • 1 கடுகு
  • 2 tsp நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை
  • பெருங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி ஜார்

Steps:

  1. முதலில் கடாயில் எண்ணெய் சேர்த்து, கருவேப்பிலை, புதினா, மல்லி இலை, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்கு வதக்கி மாற்றி வைக்கவும். .
  2. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, உப்பு, இஞ்சி, பூண்டு, புளி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.பின் அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. தாளித்து எடுக்க கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து, வர மிளகாய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான நீர் சட்னி தயார்.