காலை உணவாக ருசியான குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் இப்படி செய்து பாருங்க!

Summary: உடலுக்கு ஆரோக்கியம்தரும் அந்த குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் செய்வது சுலபமானது. குதிரைவாலி அரிசியில்உடல் எடையை குறைக்கவும், அதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இது உதவுகிறது.நிறைய பேர் வீடுகளில் கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு,இப்போது சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அந்தவரிசையில் குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1 கப் குதிரைவாலி
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 பட்டை

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. அதனுடன் தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கி விடவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த குதிரைவாலிஅரிசியை சேர்க்கவும்.
  4. குக்கரின் மூடியை வைத்து மூடாமல் தட்டை வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும். வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி இறக்கவும்.
  5. தேவையெனில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம். சுவையான குதிரைவாலி தக்காளி தேங்காய்ப்பால் புலாவ் தயார்.