இனி உருளைக்கிங்கு சாதம் இப்படி செய்து பாருங்கள்! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!

Summary: குழந்தைகளுக்காகவே இந்த ரெசிபி, ஏனென்றால் உருளைகிழங்கென்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இந்த உருளைக்கிழங்கு சாதம் செஞ்சி கொடுங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி குறைந்த நேரத்திலும், சுலபமாக செய்துவிடலாம். நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 200 கிராம் உருளைக்கிழங்கு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கப் சாதம்
  • 1 பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 2 வெங்காயம்
  • உப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம்,போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  4. அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் அடுத்து நறுக்கிய உருளை கிழங்கை சேர்க்கவும் பின்பு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. உருளைக்கிழங்கு கொஞ்சம் வெந்ததும் உதிராக வடித்த சாதத்தை கொட்டிக் கிளறி மூடி வைத்து மிதமான தீயில் 8 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.
  6. இப்பொழுது சுவையான உருளைகிழங்கு சாதம் தயார்.