வீடே மணக்கும் ருசியான தேங்காய் பால் ரசம் இப்படி வீட்டில் எளிதாக தயார் செய்யலாம்!!!

Summary: மணக்க மணக்க சூப்பரான தேங்காய்பால் ரசம் , நம்முடைய வீட்டிலும் தயார் செய்யலாம் . தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளைபாதுகாப்பாக வைத்திருக்கும். நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தேங்காய்பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமானசத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில்சுவையில் கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்வாங்க.

Ingredients:

  • 1 கப் தேங்காய் துருவல்
  • 25 சின்ன வெங்காயம்
  • சிறிய புளி
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 4 மிளகாய் வற்றல்
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி கல் உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்துஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும். 5. வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்.
  4. பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும். புளித்தண்ணீர்கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  5. 5 நிமிடம்கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது. பால் திரிந்து விடும்.  சுவையானதேங்காய் பால் ரசம் தயார்.