ரொம்ப ஈஸியா 10 நிமிஷத்துல ருசியான ஆம்லெட் மசாலா ரைஸ் செய்வது எப்படின்னு பார்க்கலாம்!

Summary: ஒரு சில முட்டைகளை  சேர்த்து ரைஸ் செய்து கொடுத்தால், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் ஆம்லெட் மசாலாரைஸ். இந்த ஆம்லெட் மசாலா ரைஸ் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் முட்டை வைத்து ஒரு அருமையான கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.

Ingredients:

  • 1 கப் அரிசி
  • 4 முட்டை
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 1/2 பிரியாணி மசாலா
  • 3 தேக்கரண்டி தயிர்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • கொத்தமல்லித் தழை
  • உப்பு
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 2 வரமிளகாய்
  • கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அரிசியை வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவிடவும். முட்டையுடன் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடித்து ஆம்லெட் போட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்..கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து கரையும் வரை நன்கு வதக்கவும்.
  4. தக்காளி வதங்கியதும் பிரியாணி மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதனுடன் ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து முட்டையில் மசாலா சேரும் வரை வேகவிடவும்.
  5. பின் சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான ஆம்லெட் மசாலா ரைஸ் தயார்.