எவ்வளவு செய்தாலும் காலியாகும் இனி ருசியான பீட்ரூட் ஃப்ரை இப்படி கூட செய்யலாம்! இதன் ருசியே தனி ருசி!

Summary: பீட்ரூட் பூமிக்கு அடியில்   விளையும் சத்துமிக்க ஒருகாய் . பீட்ருட் ஃப்ரைஒரு நல்ல பக்க உணவாக அமைகிறது.இந்த பீட்ருட் ஃப்ரைசாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம், மிகவும் அருமையான ருசியுடன் இருக்கும். இது எளிதான, ஆரோக்கியமான செய்முறையாகும்.ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் உணவில் பீட் ரூட்டை சேர்த்துக்கொள்வது அவசியம். பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதோடு பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் மூலம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Ingredients:

  • 1/4 கிலோ பீட்ருட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • உப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 4 தேக்கரண்டி எள்
  • 5 வரமிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 தேக்கரண்டி சீரகம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பீட்ருட் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். மிளகாயை லேசாக வறுக்கவும். சீரகம், எள், பூண்டு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம்  வதக்கியவற்றுடன் பீட்ருட், உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  4. பீட்ருட்நன்கு வெந்ததும் பொடியை சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.. சுவையான பீட்ருட் ஃப்ரை தயார் .